'முன்பின்' தெரியாதவரை 'ஒருநாள்' தங்கவைத்த 'இளம் பெண்'!.. 'இரவில்' கண்விழித்து 'பார்த்தபோது' காத்திருந்த 'அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கியில் இருந்து வடக்கு லண்டனுக்கு வந்த செவ்தலின் அடான்சவ் என்கிற 32 வயது இளைஞரை, தனக்குத் தெரிந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரின் பரிந்துரையின் பேரில், இளம் பெண் ஒருவர், ஒரு இரவுக்கு மட்டும் தனது வீட்டில் தங்கவைத்துவிட்டு, தானும் அன்று இரவு உறங்கினார்.
![unknown man abused girl who permitted him to stay one night unknown man abused girl who permitted him to stay one night](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/unknown-man-abused-girl-who-permitted-him-to-stay-one-night.jpg)
ஆனால் பாதிதூக்கத்தில் கண்விழித்து பார்த்தபோது, அந்த இளைஞர் கத்தியுடன் நின்றுகொண்டிருந்ததோடு, தனது வாயையும் இறுக்கமாக மூட முயற்சித்ததால் அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் கத்தினால் கழுத்தை அறுத்துவிடுவதாக, அப்பெண்ணை மிரட்டிய செவ்தலின், அப்பெண்ணை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
ஆனால் எப்படியோ அவரிடமிருந்து தப்பியோடிய அப்பெண், தனது நண்பர் மூலம் காவல்துறையினரிடத்தில் அளித்த புகாரின் பேரில், அங்கு விரைந்த போலீஸார் செவ்தலினை கைது செய்தனர். பின்னர் தொடர் நீதிமன்ற விசாரனையில், தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்து வந்த செவ்தலின், அப்பெண் தாக்குதலுக்குள்ளான தடயவில் சான்றுகள் ஒப்படைக்கப்பட்ட பின்னரே, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லண்டன், வுட் கிரீன் க்ரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)