"இத அப்பவே பண்ணியிருந்தா.. கொரோனா இந்த ஆட்டம் ஆடியிருக்காது!".. கொந்தளிக்கும் யுகே விஞ்ஞானி!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தால் கொரோனா இறப்பு எண்ணிக்கையை பாதியாக குறைத்திருக்கலாம் என்று இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு 51 ஆயிரத்து 766 பேர் ஆளாகியுள்ள நிலையில், மார்ச் 23-ஆம் தேதி அன்று ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதுகுறித்து இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் தொற்றுநோயியல் நிபுணருமான நீல் பெர்குசன் கூறும்போது, “புதிய கொரோனா வைரஸ்க்கு எதிராக இங்கிலாந்து சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அது தாமதமானதுதான். இந்த நடவடிக்கைகளை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு, 3 முதல் 4 நாட்களுக்கு முன்னரே கொண்டுவந்திருந்தால் இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு விதிகளை எல்லாம் மீறி பெண் நண்பரை சந்தித்ததால், நீல் பெர்குசன் அரசாங்க கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய வகிக்கும் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவில் இருந்து விலகினார்.