'விருந்தாளி'ங்க வந்தாங்கன்னு... வேகமா நடந்த 'சமையல்'... கொதிக்குற சாம்பாரால்... 'ஐந்து' வயது மகனுக்கு நேர்ந்த 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஹையாத் நகரில் புதுமனை புகுவிழாவிற்கு வெங்குலு என்பவர் தனது குடும்பத்துடன் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், திரும்பி வீட்டுக்கு வந்த போது, சில விருந்தினர்கள் வெங்குலு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்காக, வெங்குலு மற்றும் அவரது மனைவி வேகமாக சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் ஐந்து வயது மகன், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை இழுத்துள்ளான். அந்த சாம்பார் முழுவதுமாக சிறுவன் மீது கொட்டியுள்ள நிலையில், உடனடியாக அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கொடிய சம்பவத்தால் வெங்குலு மற்றும் குடும்பத்தினர் கலங்கிப் போயினர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சில தினங்களுக்கு முன், பாலாபூர் என்னும் பகுதியில், சமையல் செய்து கொண்டிருந்த போது கொதிக்கும் எண்ணெய் உடம்பில் ஊற்றியதில் படுகாயமடைந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
