குழந்தைகளுக்கு 'கொரோனா' பரிசோதனை செய்தபோது தெரியவந்த 'ஷாக்' ரிப்போர்ட்.. 'உறைந்துபோய்' நிற்கும் 'உலக சுகாதார மையம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 19, 2020 10:16 AM

உலகம் முழுவதும் 47 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ள நிலையில் 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

new disease targetting children found during covid19 Test in UK

வயது வித்தியாசமின்றியும், ஏழை பணக்காரர்கள் வித்தியாசமின்றியும் பாரபட்சமில்லாமல் அனைவரையும் தாக்கி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு அரிய வகை நோய்த்தொற்று உருவாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோய்த்தொற்று எதனால் ஏற்பட்டது என்கிற ஆராய்ச்சியிலும் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜெனிவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்க்கோவா, கொரோனா வைரஸ் பரவலுடன் சேர்ந்து குழந்தைகளை தாக்கக் கூடிய அரிய வகை  நோய்த்தொற்று பரவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பரிசோதனை செய்யும்போது இது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அரிய வகை நோய்த்தொற்றின் பாதிப்பை அழிப்பது சற்றே சிரமமாக இருப்பதாகவும், இந்த நோய்த்தொற்றை புரிந்துகொள்வதற்கு மருத்துவர்கள் முயன்று வருவதாகவும், ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகளுக்கும் கூட இந்த நோய் பரவியிருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சி தருவதாக உள்ளதாகவும் கூறிய அவர், “ஆகவே இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்” என்றும் தெரிவித்துள்ளார்.