‘அந்த ஜெயிலுக்கு மட்டும் அனுப்பாதீங்க’.. நீதிமன்றத்தில் வாதிட்ட ‘நீரவ் மோடி’.. அப்படி என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 15, 2020 07:00 PM

மும்பை சிறையில் எலி, பூச்சிகள் இருப்பதால் தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என தொழிலதிபர் நீரவ் மோடி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

Nirav Modi cites rats, insects in Mumbai jail to avoid extradition

வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று அங்கு வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறையில் மனித உரிமை மீறல் இருந்தால் அனுப்ப முடியாது என இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்தது. இதனை அடுத்து தன்னை அடைக்க உள்ளதாக கூறப்படும் சிறையில் எலி, பூச்சி தொல்லை இருப்பதாகவும், மூடப்படாத சாக்கடை, அருகில் உள்ள சேரியில் இருந்து இரைச்சல் ஆகியவற்றால் தனது உரிமை பாதிக்கப்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாதிட்டுள்ளார்.

இதற்கு பதிலடியாக சிறைச்சாலையின் வீடியோவை இந்தியா தரப்பு இங்கிலாந்து நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. மேலும் சிறையில் அவருக்கு தனியாக 3 அடிக்கு வசதிகள் இருக்கும் என்றும், எலி, பூச்சிகள் தொல்லை இருக்காது என்றும் கூறியுள்ளது. 20 அடி உயர சுவர் உள்ளதால் அருகில் இருந்து எந்தவித இரைச்சலும் கேட்காது என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.