மிக 'மோசமான' பாதிப்பிலிருந்து கொரோனா 'இல்லாத' நகரம்!... இன்னும் '2 வாரங்களில்'... வெளியாகியுள்ள 'புள்ளிவிவரம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனில் இன்னும் 2 வாரங்களில் கொரோனா இல்லாத நிலை உருவாகலாம் என புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
லண்டனில் தற்போது ஒரு நாளில் 24க்கும் குறைவானவர்களே கொரோனா பாதிப்புக்கு ஆளாவதால் இன்னும் 2 வாரங்களில் அங்கு கொரோனா ஒழிக்கப்பட்டுவிடும் என புதிய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. தற்போது ஜூன் மாதத்திற்குள் கொரோனா இல்லாத நிலையை எட்ட உள்ள லண்டன் நகரம் முன்னதாக இங்கிலாந்திலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
லண்டனில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே பொது போக்குவரத்தில் சமூக விலகல் கட்டுப்பாடுகளை பின்பற்றியதாலேயே மற்ற நகரங்களைவிட அங்கு விரைவாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே வேலை செய்ததால் அவர்களால் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்ததும் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.
லண்டனிலுள்ள சுமார் 15 சதவிகிதம் பேர் ஏற்கெனவே நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிட்டதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது எனவும், அதனால் மீண்டும் வைரஸ் பரவுவது கடினம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இன்னும் 2 வாரங்களில் லண்டனில் கொரோனா இல்லாத நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.