'கொரோனா தாக்கிய நோயாளிகள்'... 'பெரும்பாலானோருக்கு இருந்த ஒரே ஒற்றுமை' ... ஒரு நிமிஷம் ஆடிப்போன விஞ்ஞானிகள் !
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிய பெரும்பாலான நோயாளிகள் 120 கிலோவுக்கும் அதிகமான எடையை கொண்டிருந்தது, தற்போது தெரியவந்துள்ளது.

உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா, இங்கிலாந்து நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை கொரோனா காவு வாங்கியுள்ளது. இந்தசூழ்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இங்கிலாந்தின் 177 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும், நோயாளிகள் குறித்து, லண்டன் இம்பீரியல் காலேஜ் மற்றும் லிவர்பூல், எடின்பர்க் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அதில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் வயது, பாலினம், உடல் ஆரோக்கியம் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒரு தகவல் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் பெரும்பாலான நோயாளிகள் 120 கிலோவுக்கும் அதிகமான எடையை கொண்டிருந்தது தான், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைய காரணம். மேலும் அவர்களின் அன்றாட உணவு பட்டியலில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மிகவும் குறைந்த அளவில் இருந்தது தெரிய வந்துள்ளது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும், பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்கள் உட்கொள்ளாததும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. இதன்காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டதால் கொரோனா எளிதில் தாக்கியுள்ளது. ஏற்கனவே, மூச்சுத்திணறல் பிரச்சினை கொண்ட இவர்களின் நுரையீரலை கொரோனா ஊடுருவி தாக்கிவிட்டது, என்பதும் இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே உடல்பருமன் கொண்டவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பது பற்றி இந்த ஆய்வில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
