அந்த போட்டோவ 'ஷேர்' பண்ணாதீங்க... தெரியாம பண்ணியிருந்தா 'டெலிட்' பண்ணிருங்க... இல்லன்னா நடவடிக்கை பாயும்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என மஹாராஷ்டிரா போலீசார் எச்சரித்து உள்ளனர்.
கடந்த 14-ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அவருடன் நெருங்கி பழகியவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.
A disturbing trend has been observed on Social Media platforms by Maharashtra Cyber that pictures of deceased actor Shri. Sushant Singh Rajput are being circulated, which are disturbing and in bad taste. (1/n)
— Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020
இந்த நிலையில் சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என மஹாராஷ்டிரா போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மஹாராஷ்டிரா போலீசார் ட்விட்டர் பக்கத்தில், ''அந்த புகைப்படம் பரப்பப்படுவது கவலைக்குரியது மற்றும் மோசமான ரசனை கொண்டது. இதுபோன்ற பதிவுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை. மேலும் உடனடியாக நீக்கப்பட வேண்டியவை.
It is emphasised that circulation of such pictures is against legal guidelines and court directions, and are liable to invite legal action. ⁰(2/n)
— Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020
இதுபோன்ற படங்கள் புழக்கத்தில் இருப்பது சட்ட வழிகாட்டுதல்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது. மேலும் சட்ட நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும். மஹாராஷ்டிரா சைபர் க்ரைம் மேற்கண்ட படங்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து நெட்டிசன்களையும் அறிவுறுத்துகிறது. ஏற்கனவே பரப்பப்பட்ட படங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்,'' என கடுமையாக தெரிவித்து உள்ளது.
Maharashtra Cyber exhorts and directs all netizens to refrain from circulating the aforesaid pictures. The pictures already circulated should be deleted henceforth. (3/n)
— Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020