'பட்டப் பகலில்'.. 'பார்க்கில்'.. '7 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'!.. 'பெண்' செய்த 'கொடூரச்' செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 21, 2020 06:54 PM

இங்கிலாந்தின் போல்டன் பகுதியில் உள்ள பார்க் ஒன்றில் வைத்து 7 வயது சிறுமியைக் கொன்ற 30 வயது பெண்மணியின் செயல் அதிரவைத்துள்ளது.

woman stabbed 7 year old girl in a public park UK

எமிலி ஜோன்ஸ் என்கிற 7 வயது சிறுமியை எல்டியோனா ஸ்கனா என்கிற பெண் கடந்த மார்ச் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்தில் சிறுமி எமிலியை எல்டியோனா குத்திக் கொன்றுள்ளார். அவரை கைது செய்தபோலீஸார் நீதிமன்றக் காவலில் வைத்து அவரிடம் கொலைக்குற்றத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனை அறிந்த எமிலியின் வீட்டார் அவசரமாக மருத்துவமனை அழைத்துச் சென்றும் சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்துபோனார். சுட்டிப் பெண்ணான எமிலி, தாரள மனம் கொண்ட குழந்தை என்றும், அவள் குடும்பத்தினருடன் இருந்ததைத் தவிர சந்தோஷமான தருணங்களே இருக்க முடியாது என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.