கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Apr 26, 2020 04:22 PM

கொரோனாவால் உயிரிழந்தவருடைய உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

TN Coronavirus 3 Years Jail For Disturbing Burial Or Cremation

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவருடைய உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட வேண்டுமெனவும், அதை தடுக்க முயற்சிப்பது கடும் குற்றம் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தில், "கொரோனாவால் உயிரிழந்தவருடைய உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை  விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.