'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் மட்டும் 451 கொரோனாநோயாளிகளின் இறப்பு பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலால் மஹாராஷ்ட்ராவில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிகமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் ஒரு லட்சத்திற்கம் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் மும்பையில் மட்டும் 451 கொரோனா நோயாளிகளின் இறப்பு பதிவு செய்யப்படவில்லை என Brihan mumbai municipal Coroporation மேற்கொண்ட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மஹாராஷ்ட்ர அரசிடம் BMC குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட BMC குழுவினர் இந்த தணிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்தறை அதிகாரிகள், மஹாராஷ்ட்ர அரசால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக இணையதள பக்கத்தில் பதிவேற்றப்பட்ட போது தவறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் தவறு ஜுன் 6ம் தேதி வரை நடைபெற்றிருக்கிறது. தவறவிடப்பட்ட தகவல்கள் ஜுன் 15ம்தேதிக்குள் மீண்டும் பதிவேற்றம் செய்யபட்டுள்ளன. மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஆராய்ந்த போது மும்பையில் மட்டும் 451 கொரோனா நோயாளிகளின் இறப்பு பதிவு செய்யப்படாமல் விடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தோம், எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மஹாராஷ்ட்ரா தலைமைச் செயலர் அஜய் மேத்தா, "மனிதத் தவறே இந்த குழப்பத்துக்குக் காரணம், இறப்பு விகிதத்தை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளோம். தற்போது புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம், இந்த தவறு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

மற்ற செய்திகள்
