“உலகம் முழுவதும் 4 மில்லியனை தொட்ட கொரோனா!”.. அமெரிக்காவில் 80 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்து 5 ஆயிரத்து 626 ஆக, அதாவது 4 மில்லியனாக உயர்ந்துள்ளது.
![covid19 positive toll rises to 4 millions all over the world covid19 positive toll rises to 4 millions all over the world](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/covid19-positive-toll-rises-to-4-millions-all-over-the-world.jpg)
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 13.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 2.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அமெரிக்காவில் 13 லட்சம் பேரும், ஸ்பெயினில் 2.23 லட்சம் பேரும், இத்தாலியில் 2.17 லட்சம் பேரும், பிரிட்டனில் 2.11 லட்சம் பேரும், ரஷ்யாவில் 1.88 லட்சம் பேரும், பிரான்ஸில் 1.75 லட்சம் பேரும், ஜெர்மனியில் 1.70 லட்சம் பேரும் தென் ஆப்பிரிக்காவில் 8,895 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 80 ஆயிரத்தையும், ஸ்பெயினில் 26 ஆயிரத்தையும், இத்தாலியில் 30 ஆயிரத்து 500 ஐயும், பிரிட்டனில் 31 ஆயிரத்தையும், ரஷ்யாவில் 1,800ஐயும் தென் ஆப்பிரிக்காவில் 178ஐயும் தொட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)