“பெட்ரூம் கதவு, பாத்ரூம் டப்ல ஓங்கி அடிச்சு.. ஆஷ் ட்ரேயால முகத்துல தாக்கினாரு!”... மாப்பிள்ளையின் சைக்கோ தனத்தால் மணப்பெண் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்39 வயதான பெக்கி அட்கினும் 40 வயதான லீ முலிகனும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்த பின்னர் முறையான பதிவு திருமணத்தை வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி செய்துகொள்ள முடிவெடுத்திருந்தினர். ஆனால் தன்னை திருமணம் செய்துகொள்ளாத கணவரின் முரட்டுத்தனமான மற்றும் வன்முறையான நடத்தையைக் கடந்த நவம்பரில் கண்ட பெக்கி, இந்த திருமணத்துக்கு முன்பாகவே லீ பற்றி புகார் அளித்ததுடன் இந்த திருமணத்தை நிறுத்தியுமுள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த சம்பவம்தான் இதற்குக் காரணம். லீயின் தாய் வீட்டுக்கு சென்றுவந்த பெக்கி இரவு தாமதமாக வந்ததால் கோபமான லீ, பெக்கியை பலவகையிலும் பேசி, பெட்ரூம் கதவை நோக்கி தூக்கி அடித்தும் பாத்ரூம் டேபில் வைத்து அமுக்கியும் வன்முறையாக நடந்துகொண்டுள்ளார். அப்போதும் லீயிடம் இருந்து தப்பித்து ஓடிய பெக்கியை நோக்கி, சிகரெட்டினை அணைக்க பயன்படும் கணமான கண்ணாடி ஆஷ் ட்ரேயை தூக்கி அடிக்க, அதனால் முகத்தில் பல தையல்கள் போட வேண்டிய சூழலுக்கு பெக்கி ஆளானார்.
இத்தனை களேபரத்தையும் மீறி தப்பிப் பிழைத்த பெக்கி, அதன் பின்னர் கூட லீயுடன் இணைந்து வாழ்ந்துள்ளார். ஆனால், பின்னாளில் தன் வாழ்க்கையையும் தனது குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பின் அடிப்படையில் யோசித்த பெக்கி, லீயை திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வதில் உடன்பால்லாமலும், தவிர அவரது வன்முறைத்தனத்தை கண்டிக்கும் வகையிலும் அளித்த புகாரின் அடிப்படையில் லீக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுபற்றி பேசிய பெக்க், “நான் திரும்பவும் அவர பாக்கவே விரும்பல. அவர் திருமணத்துக்கு குறிக்கப்பட்ட நாளின் முதல் இரவை சிறையிலேயே கழிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
