“3 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு!.. இப்ப தளர்த்துனா அப்றம்..”.. நிபந்தனைகளுடன் ‘இங்கிலாந்து’ எடுத்த முக்கிய முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் 3 வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இதுவரை இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 13 ஆயிரத்து 729 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி பேசிய இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு மற்றும் தனிமனித இடைவெளியால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும், இந்த நேரத்தில் இந்த நடவடிக்கைகளை தளர்த்தினால் அது பொது சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியவர், தினசரி இறப்பு விகிதத்தில் வலுவான வீழ்ச்சியும், நோய்த்தொற்று நிலையாக குறைந்துவிட்டது என்பதற்கான நம்பகத்தன்மையான புள்ளிவிவரத்தின் விகிதாச்சாரமும் சாத்தியமாகவேண்டும் என்றும், முறையான பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்வது எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் என்றும் இவற்றை நிபந்தனைகளாகக் கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
