"ரொம்ப நல்ல பொண்ணு.. அவளுக்கா இப்படி நடக்கணும்!".. இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு '2 சூட்கேஸில்' சடலமாக மீட்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 20, 2020 09:51 PM

இங்கிலாந்தில் 28 வயதான போனிக்ஸ் நெட்ஸ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போனார். 

UK woman found chopped in half and dumped in suitcases

தற்போது அவர் கொலை செய்யப்பட்டும், உடல் வெட்டப்பட்டும் இரண்டு தனித்தனி சூட்கேஸ்களில் வீசப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் இருக்கும் அனா லியானா என்கிற 55 வயதான உறவுக்கார பெண்மணியின் அடைக்கலத்தில், அவரது வீட்டில் வசித்து வந்த நெட்ஸை தனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் என்றும் அவர் மிகவும் இனிமையான பெண் என்றும், நெட்ஸ் கொலை செய்யப்பட்டு இருவேறு சூட்கேஸ்களில் காட்டுப் பகுதியில் வீசப்பட்டிருந்ததை, தான்தான் முதலில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அனா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணையும், அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த 38 வயது நபரையும், நெட்ஸை கொலை செய்ததற்காக போலீஸார் கைது செய்தனர்.  இவர்கள் இருவரும் நெட்ஸை கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டுகளாக்கி இரண்டு சூட்கேஸ்களில் அடைத்து காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளனர். இந்நிலையில் அனாவின் உதவியுடன் பிரேதத்தை கண்டுபித்து இவர்களை போலீஸார் கைது செய்துள்ளதோடு, மேற்கொண்டு விசாரணையும் செய்து வருகின்றனர்.

நெட்ஸின் அண்டைவீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பேசும்போது, நெட்ஸ் மிகவும் கனிவானவர் என்றும் அவருக்கு இந்த நிலை மிகவும் கொடூரமானது என்றும் அவருக்கு இது நடக்கக் கூடிய ஒன்று அல்ல என்றும் கதறி அழுதபடி கூறியுள்ளனர்.