கொரோனா 'கன்ஃபார்ம்'ன்னு... வீட்ல இருக்க சொன்னா... மனுஷன் 'தெரு தெரு' வா சுத்தியிருக்காரு... 'சென்னை'யை அதிர வைத்த 'இளைஞர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் அதுவும் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையின் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தனது வீட்டில் 40 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால் உடனடியாக, சுகாதாரத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் கொரோனா வைரசை பரப்பும் நோக்கில் நடந்து கொண்டது தெரிய வந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் புகாரின் பெயரில் ஆயிரம்விளக்கு போலீசார் அந்த இளைஞர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தொற்று நோய் தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இளைஞரின் இந்த செயலால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உறைந்து போனது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
