‘வயிற்று வலியால் உயிரிழந்த மகன்’!.. கதறி அழுத அப்பா மாரடைப்பால் பலி’!.. ஒரே நாளில் அடுத்தடுத்து சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 06, 2019 12:45 PM

மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Father died after hearing about Son\'s death news in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (75). இவரது மகன் ராஜாங்கம் (46). ராஜாங்கத்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. வார சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ராஜாங்கம் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதனால் நேற்று புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துமனையில் ராஜாங்கத்தை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராஜாங்கத்தின் உடலை பார்த்து அவரது தந்தை ஆறுமுகம் கதறி அழுதுள்ளார். அப்போது துக்கம் தாங்காமல் அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது.

இதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PUDUKKOTTAI #FATHER #SON #DIES