ஒரு தடவ 'இடிச்ச' சரி.. ஒவ்வொரு 'தடவையும்' இடிச்சா எப்டிமா?.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manjula | Oct 31, 2019 11:00 PM
சாலைகளில் எதார்த்தமாக செல்லும்போது யாராவது புதிதாக வண்டி ஓட்டுபவர்கள் நம்மீது சில நேரங்களில் மோதி விடுவார்கள். நாமும் சரி என மன்னித்து விடுவோம். ஆனால் மறுமுறையும் உங்களை வந்து வண்டியால் இடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?அதேபோன்ற ஒரு சம்பவம் தான் இந்த வீடியோவில் நடந்துள்ளது.

இது தெரியாமல் நடந்த விபத்து போல தெரியலயே.டிரைவிங் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்😂😅
அடுத்தது என்ன நடந்திருக்கும்😅 pic.twitter.com/3XGXd8nk4l
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) October 30, 2019
ஸ்கூட்டியில் செல்லும் பெண் ஒருவர் நடந்து செல்லும் ஒருவர் மீது மோதி விடுகிறார். அவர் சரி என மன்னித்து விட்டு விடுகிறார். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே மீண்டும் அந்த நபர் மீது மோதி இருவரும் கீழே விழுந்து சாய்கின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : #ACCIDENT
