‘விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்’.. ஆத்திரத்தில் கணவர் ‘கார் பார்க்கிங்கில்’ செய்த நடுங்க வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 12, 2019 12:08 PM

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Dubai Indian man stabs wife to death in a car park after argument

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வித்யா (39) என்ற பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்துள்ளார். அதிக கடன் காரணமாக சந்திரன், வித்யா இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்துவந்தாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவரின் துன்புறுத்தல் பொறுக்க முடியாமல் கடந்த ஆண்டு வித்யா போலீஸிலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பின்னர் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு சிறிது காலம் இருவருக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் துபாய் சென்று அங்கு தங்கி வேலை செய்து வந்த நிலையில் இவர்களுடைய 2 மகள்களும் வித்யாவின் பெற்றோர் கவனிப்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி துபாயின் அல் கோஸ் என்ற பகுதியிலுள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் வித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வித்யாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சந்திரனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள வித்யாவின் சகோதரர் வினயசந்திரன், “என்னுடைய அக்கா ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றே கேரளா வந்திருக்க வேண்டும். தனது குழந்தைகளைப் பார்க்க அவர் மிகவும் ஆவலாக இருந்தார். தற்போது அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Tags : #DUBAI #KERALA #TRIVANDRUM #HUSBAND #WIFE #STABBED #BRUTAL