‘சம்பளம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு’... ‘பைக் ஓட்ட கத்துக்கப்போய்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'சென்னையில் நொடியில் நடந்த விபத்து'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 11, 2019 10:22 AM

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது நண்பருடன் பைக் ஓட்ட கற்றுக்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two wheeler met accident near chennai, woman died

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த சிக்கராயபுரம் அருகே, இருசக்கர வாகன விபத்தில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், அருகில் இளைஞர் ஒருவர் காயங்களுடன் மயக்கநிலையில் இருப்பதாக, போலீசாருக்கு  தகவல் வந்தது. இதையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காயம் அடைந்தவர் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த, 21 வயதான அண்ணாமலை என்பது தெரியவந்தது. உயிரிழந்த இளம்பெண் குன்றத்தூரை அடுத்த, கோவூர் பகுதியை சேர்ந்த 20 வயதான அபிநயா என்பதும், காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஷோரூமில், கடந்த சில வாரங்களாக வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

அங்கு செல்லும்போது அபிநயாவுடன், அண்ணாமலைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அபிநயா, அந்த வேலையில் இருந்து நின்று விட்டதால், இதுவரை வேலை செய்ததற்கான சம்பள பணத்தை வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு, சென்றுள்ளார். அப்போது குன்றத்தூரில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அண்ணாமலை, அபிநயாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

வழியில் அபிநயாவுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட பயிற்சி கொடுப்பதாக கூறி, அவரை பைக்கின் முன்னால் உட்கார்ந்து ஓட்ட வைத்து விட்டு, பின்னால் அண்ணாமலை அமர்ந்து இருந்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் உள்ள கம்பியின் மீது,  பைக் மோதியதில் அபிநயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அண்ணாமலை படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #CHENNAI #ACCIDENT