'அலறல் சத்தம் கேட்டுச்சு'...'குளிப்பதற்கு 'ஹீட்டரால் தண்ணீரை' சுட வைத்த பெண்'...உலுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 11, 2019 09:45 AM
தண்ணீரை சுட வைப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன பொண்ணு. இவர் குளிப்பதற்காக வாளியில் தண்ணீர் நிரப்பி, அதற்குள் வாட்டர் ஹீட்டர் சாதனத்தை பொருத்தியுள்ளார். இதையடுத்து தண்ணீர் சூடான உடன் குளிப்பதற்காக சென்ற சின்ன பொண்ணு, ஸ்விச்சை அணைக்க மறந்து வாளியில் இருந்து தண்ணீரை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சின்ன பொண்ணு தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு பதறிய கணவர், கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்து பார்த்துள்ளார். அப்போது சின்ன பொண்ணு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மனைவியை பார்த்து துடித்து போன அவரது கணவர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சின்ன பொண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மனைவியின் உடலை பார்த்து அவரது கணவர் கதறி அழுதார்.
இதனிடையே வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதில் ஏற்பட்ட கவனக்குறைவால் பெண் ஒருவரின் உயிர் பறிபோன சம்பவம் ஓமலூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மின்துறை வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில் பணம் கொடுத்து வாங்கும் வாட்டர் ஹீட்டர்கள் தரமானதா ஐஎஸ்ஐ முத்திரை(ISI) உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற வாட்டர் ஹீட்டர்களை வாங்க வேண்டாம் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.