‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 16, 2019 02:39 PM
ஹைதராபாத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்று மாணவிகளுக்கு கடும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் கல்லூரி சமீபத்தில் மாணவிகளுக்கு கடும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகளின் மேலாடை கால் முட்டி வரை இருக்க வேண்டும், ஸ்லீவ் லெஸ் ஆடைகள் அணியக் கூடாது, குட்டையான ஆடைகள் அணியக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு நீளமான உடை அணிந்தாலே திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்கும் என காரணம் கூறப்பட்டதாகவும் மாணவிகள் சிலர் கூறியுள்ளனர்.
இந்த விதிமுறைகளை மீறி ஆடை அணிந்து வரும் மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக கல்லூரி வாசலில் பெண் செக்யூரிட்டி ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கல்லூரிக்கு வரும் மாணவிகளின் ஆடை அளவை கண்காணித்தே அவர்களை உள்ளே அனுமதிக்கிறார். இதுதொடர்பாக பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து தற்போது இந்த விதிமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.