‘சொகுசு பேருந்தும் மினி வேனும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘நொடியில் நடந்து முடிந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 12, 2019 03:34 PM

சொகுசு பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 dead 6 injured in government bus van accident near Tirupati

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற பண்டிகை ஒன்றில் குடும்பத்துடன் பங்கேற்றுவிட்டு முல்பாகலைச் சேர்ந்த 8 பேர் மினி வேன் ஒன்றில் ஊர் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிரே வந்த கர்நாடக அரசின் சொகுசு பேருந்து ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி வேன் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து மோதி வேனில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சந்திரகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #TIRUPATI #GOVERNMENTBUS #VAN #ACCIDENT