‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 12, 2019 07:05 PM

பள்ளிக்கரணை அருகே பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Chennai 23 YO Woman dead over admk banner slope down

சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ (23) என்பவர் கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். பள்ளிக்கரணையிலிருந்து அவர் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த பேனர் ஒன்று அவர்மீது சரிந்து விழுந்துள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் தண்ணீர் லாரி ஒன்றில் சிக்கியுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுபஸ்ரீ உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசியல் மற்றும் குடும்ப காரணங்களுக்காக பேனர் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு காரணமாக இருந்த பேனர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் என்பவரால் அவரது மகனின் திருமணத்திற்காக வைக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #ADMK #BANNER #23YEAROLD #GIRL #ACCIDENT #TWOWHEELER #LORRY