இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குப்பின் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அக்கட்சியில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சீனாவின் ஹுபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 242 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,355 ஆக உள்ளது.
3. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. புதிய தரவரிசைப் பட்டியலையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
4. நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வினய் சர்மாவின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது.
5. குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டுமென அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
7. ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் மீட்குமாறு கப்பலில் உள்ள 6 தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8. சீனாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரும் முயற்சியால் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
9. தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான கால அவகாசத்தை வரும் 17ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
10. கேரளாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு லி்ட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 13 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
11. நாமக்கல் அருகே சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஹோட்டல் தொழிலாளி ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
12. ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜப்பானில் கொரோனாவால் முதல் மரணம் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
13. மும்பையில் வணிக வளாக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
