‘ஐடி’ ஊழியர்கள் தான் ‘டார்கெட்’... அதிலும் ‘குறிப்பாக’... சிக்கிய ‘மோசடி’ கும்பல்... வெளியான ‘அதிரவைக்கும்’ தகவல்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 10, 2020 04:55 PM

ஐடி துறையில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் பெயரில் தனியார் வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றி வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Telangana Gang Creates Fake IDs Of Dead Techies To Cheat Banks

தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தில் கிரெடிட் கார்டு மூலமாக 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுவிட்டு தலைமறைவான நபர் ஒருவரைக் கண்டுபிடித்துத் தருமாறு ஹெச்டிஎஃப்சி வங்கி சார்பில் போலீசாரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசாருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்துள்ளன.

விசாரணையில், 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இதுபோல பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக அவர்கள் ஐடி துறையில் பணி புரிந்து உயிரிழந்த நபர்கள் குறித்த செய்திகளை நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக சேகரித்து, பின்னர் அதை வைத்து வங்கிகளை ஏமாற்றி கடன் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அவர்கள் கிழக்கு கோதாவரி, நல்கொண்டா, பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உயிரிழந்த ஐடி ஊழியர்களின் விவரங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 53 லட்சத்து 93 ஆயிரத்து 43 ரூபாய், ஒரு கார், போலி அடையாள அட்டைகள், 100 செல்போன்கள், போலி அடையாள அட்டை தயார் செய்வதற்கான இயந்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Tags : #TELANGANA #IT #MONEY #TECHIE #CRIME #HYDERABAD #GANG #BANK #LOAN