‘என்ன இங்க இருந்த போட்டோவ காணோம்’.. கேப்டன் உங்ககிட்டயே சொல்லலையா?.. என்ன ஆச்சு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 13, 2020 11:20 AM

ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து புரோபைல் மற்றும் கவர் போட்டோ நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli reacts after RCB remove picture and name on social media

ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முக்கிய அணியாக கருதப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றதில்லை. இதனால் தொடர்ந்து ரசிகர்களிடையே இந்த அணி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ‘பெங்களூரு’ நீக்கப்பட்டு ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் புரோபைல் போட்டோ மற்றும் கவர் போட்டோவும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டன. எந்தவித அறிவிப்புமின்றி திடீரென நடந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, ‘கேப்டனிடம் தெரிவிக்காமல் பதிவுகள் மறைந்துவிட்டன. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார். அதேபோல் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால்,  ‘அரே ஆர்சிபி, என்ன கூக்லி (Googly) இது? எங்க போனது உங்கள் புரோபைல் போட்டோ மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள்?’ என கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.