ஓடி ஒளியிற பழக்கம் எனக்குக் கிடையாது... 'பெய்ஜிங்' நகரில் நேரில் ஆய்வு செய்த சீன அதிபர்... விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த 'ஜிஜின்பிங்'
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த சில வாரங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலும், பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமலும் இருந்து வந்த சீன அதிபர் ஜிஜின்பிங் பெய்ஜிங் நகருக்கு நேரில் சென்று மருத்துவமனையில் ஆய்வு செய்தார். இதன் மூலம் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவை வெகுவாக பாதித்துள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங் களத்திற்கு வராமல் இருப்பதாகவும், ஊடகங்களில் வந்து கூட பேசாததாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மருத்துவக்குழுவிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவும் பேசினார்.
கடந்த வாரம் கம்போடிய பிரதமரை ஜின்பிங் சந்தித்திருந்த நிலையில் தற்போதுதான் தான் சீன அதிபரை பொது நிகழ்ச்சியில் பார்க்க முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
