'கொரோனாவை' வென்ற 'கேரள' மாணவி... 10 நாள் சிகிசையில் 'பூரண குணம்'... 'வைரஸ்' பீதியிலிருந்து 'விடுதலை'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 10, 2020 05:46 PM

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A medical student infected with corona in Kerala is recovering

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியதையடுத்து, இந்தியாவிலும் தன் கால்தடத்தை பதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதன் பாதிப்பு இருந்தாலும், கேரளாவில் அதிகமாக உள்ளது.

கடந்த 30ஆம் தேதி வுகான் நகரில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி நாடு திரும்பினார். அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில், அவருக்கு கடந்த 10 நாட்களாக திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் முடிவுகள் நெகடிவ் என வந்துள்ளன.

மீண்டும் ஒருமுறை எடுக்கப்படும் சோதனையிலும் இதே முடிவு வந்தால் அந்த மாணவி பூரணமாகக் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார். திருச்சூரைச் சேர்ந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்தச் செய்தியால் கேரள மக்கள் மட்டுமல்லாது மொத்த இந்திய மக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் உறுதி என்ற மக்களின் மனிநிலையில் இந்த சம்பவம் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. கொரோனா வைரஸ் அதிகபட்சம் 9 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என்பதால் 10 நாள் சிகிச்சையில் பூரண குணமடைந்து விடலாம் என அண்மையில் வெளியான ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் காய்ச்சலைக் குறைத்து ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொண்டால் வைரஸ் தாக்குதலிலிருந்து முற்றிலும் குணமடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : #CORONA #KERALA #MEDICAL STUDENT #RECOVERING