'வேக்சின்' கண்டுபிடிச்சாச்சு... விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும்... 'இரவு பகலாக' நடைபெறும் 'சோதனை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 11, 2020 10:12 AM

சீனாவில் கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்தை எலிகளுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யும் ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

Trial of mice infected with coronavirus-Chinese doctors tested

கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்தை உருவாக்க உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த நிறுவனம் டோங்ஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் மருத்துவ உலகில் உள்ள விதிகளின் படி பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே இந்த மருந்து நடைமுறைக்கு எடுத்து வரப்படும்.

அதன்படி இந்த மருந்தை தற்போது எலிகளுக்குச் செலுத்தி அவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அடுத்ததாக குரங்குகளுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதால் விரைவில் இந்த மருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #CORONA #CHINA #VACCINE #DOCORS #TESTED #MICE