தானாக முன்வந்து ‘பரிசோதித்து’ கொண்டால் ‘பரிசு’... நாளுக்கு நாள் ‘அதிகரிக்கும்’ பலி எண்ணிக்கை... ‘தீவிர’ நடவடிக்கையில் இறங்கிய அரசு...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என தானாக முன்வந்து பரிசோதித்து கொள்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என தானாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு 1000 யுவான் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள ஹூபே மாகாணத்தில் முதன்முதலாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், காய்ச்சல் மற்றும் பிற நோய் அறிகுறிகளுடன் வந்து பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கும் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 908 பேர் உயிரிழந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
Tags : #MONEY #CHINA #CORONA #REWARD #TEST