‘தனியாக வீட்டில் இருந்த செவிலியருக்கு’... ‘நிகழ்ந்த பயங்கரம்’... 'மகளிர் நீதிமன்றம் கொடுத்த'... 'அதிகபட்ச தண்டனை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 12, 2020 11:23 PM

செவிலியர் ஒருவர்  பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Govt Nurse Rape and Murdered, Death Sentence for 2 convicts

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்தவர், செவிலியர் (40), மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன், கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வந்ததால், செவிலியர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தமிழ்செல்வி, வெகுநேரம் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து கதவை உடைத்துப்பார்த்தபோது, செவிலியர் வீட்டு மாடியில், அவரது வாயினுள் டவலை திணித்து நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த 1,40,000 ரூபாய் மதிப்பிலான நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது மகேந்திரன் என்ற ராஜேந்திரன் (24), கார்த்திக் (21), ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா (27), வசந்தகுமார் (30), கணேசன் (51), சின்னத்துரை (27)  ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைதுசெய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனியாக தூங்கிக் கொண்டிருந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த கொலையில் சம்பவ இடத்தில் கிடைத்த தரவுகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் கிடைத்த முடிவுகளை ஆதாரமாக வைத்து வாதாடப்பட்டது. அதில், வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோர் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராஜேஷ், வசந்தகுமார் ஆகியோரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதிக் கூறினார். குற்றவாளிகளான இருவருக்கும் பாலியல் வன்கொடுமை செய்து, பின் கொலை செய்த பிரிவின் கீழ் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜேஷ்க்கு ஆயுள் தண்டனையும், வசந்தகுமாருக்கு 10 வருட தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். 12 ஆணடுகளுக்குப்பின் தீர்ப்பு வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #RAPE #MURDER #NURSE #DEATH #SENTENCE