புகைப்பிடிப்பதை கண்டித்த தாய்க்கு மகனால் நேர்ந்த கொடூரம்.. பயத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒட்டன்சத்திரத்தில் புகைப்பிடிப்பதை கண்டித்த தாயை கத்தியால் குத்திவிட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர்கள் திருமலைசாமி-கணேஷ்வரி தம்பதி. இவர்களது மகன்கள் சூர்யா (18), சரவணன் (16). இதில் சூர்யா 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள உரக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அப்பகுதியில் உள்ள கடையில் சூர்யா புகைப்பிடித்துக்கொண்டு இருந்ததை அவரது தாய் கணேஷ்வரி பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கடையில் வைத்து சூர்யாவை கண்டித்துள்ளார். பின்னர் சூர்யா வீட்டிற்கு வந்த பிறகும் கணேஷ்வரி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த கத்தியால் தாயை குத்தியுள்ளார். இதில் படுகாயமைடைந்த கணேஷ்வரி சிகிச்சைகாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் சூர்யா வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகைப்பிடிக்க கூடாது என கண்டித்த தாயை கத்தியால் குத்திவிட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
