கொரோனா என்பது ஃபேமிலி பேராம்... ஒரிஜினல் பேரை அறிவிச்சிருக்காங்க WHO... ஏன்? எதற்கு?... தகவல் உள்ளே...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் இனி கொவிட்-19 (Covid-19) என்ற பெயரில் அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் என தற்போது அழைக்கப்படும் உயிர்க்கொல்லி கிருமிக்கு உயிரியல் வல்லுனர்கள் புதிய பெயர் வைத்துள்ளனர். உண்மையில் கொரோனா என்பது குறிப்பிட்ட வகை வைரஸ்களின் தொகுப்பாகும். குறிப்பிட்ட வகை வைரஸ்களின் ஃபேமிலி பெயர் தான் கொரோனா என அழைக்கப்படுகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட வைரஸ் தான் தற்போது சீனாவில் பரவி பலத்த உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு உயிரியல் வரைமுறைக்கு உட்பட்டு ஒரு பெயர் வைக்கப்பட வேண்டும் என்பதற்காக, இதற்கு கொவிட்-19 என விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர்.
ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று இப்பெயரை அறிவித்துள்ளது. கொரோனாவில் உள்ள CO, வைரஸில் உள்ள VI, நோய் (disease) உள்ள D ஆகிய முதல் எழுத்துக்களை எடுத்து COVID என்றும், நோய் பரவிய ஆண்டான 2019 ஐ குறிப்பிடும் வகையில் COVID-19 என்றும் பெயர் வைத்துள்ளனர்.
