இனி பேசி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த தந்தை... பெற்ற மகன் என்றும் பாராமல்... ஆத்திரத்தில் செய்த வெறிச் செயல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 11, 2020 11:36 AM

புதுச்சேரியில் பெற்ற தந்தையே மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The incident in Puducherry that a father who killed his son

புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் குமார். பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவரது மகன் ரஞ்சித் ஃபிரான்சில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித் பிரான்சில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.  இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக சண்டை வந்துள்ளது.

நேற்று இரவும் இருவருக்கம் இடையே சண்டை மூண்டுள்ளது. இருவரும் ஆத்திரத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், தாக்கிக் கொண்டும் சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய தந்தை குமார் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து மகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #PUDUCHERRY #ARIYANKUPPAM #FRANCE #MURDER