'கல்யாண வீட்டிற்கு போன பெற்றோர்'... 'திரும்பி வந்தபோது மகள் கிடந்த கோலம்'...அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Feb 06, 2020 03:47 PM

திருமண வீட்டிற்குப் பெற்றோர் சென்றிருந்த நிலையில், அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டிலிருந்த கல்லூரி மாணவி தூக்கில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jaffna : College student allegedly commits suicide in Home

இலங்கையின் யாழ்ப்பாணம், சங்கிலியன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவசாயினி. இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த பெற்றோர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியே சென்றிருந்தார்கள். திருமண நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு பெண்ணின் பெற்றோர் வீடு திரும்பியுள்ளார்கள்.

அப்போது வீட்டில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வீட்டை விட்டுக் கிளம்பும்போது நன்றாக இருந்த மகள், திரும்பி வந்து பார்த்தபோது தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தாள். இதனால் கண்ட அவர்கள் கதறித் துடித்தார்கள். இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தார்கள்.

சிவசாயினி எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. கடந்த ஆண்டு நடந்த கல்லூரி தேர்வில் அவர் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #SUICIDEATTEMPT #SRILANKA #COLLEGESTUDENT #JAFFNA #YALPANAM