VIDEO: ‘நிறுத்த சொன்னா நிக்கமாட்டயா’!.. டிராஃபிக் போலீஸ் மீது மோதிய கார் டிரைவர்.. பரபரக்க வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 04, 2020 07:48 AM

டெல்லியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற கார் மீது ஏறிய காவலரை 2 கிலோமீட்டர் இழுத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man dragging traffic cop on car\'s bonnet goes viral

டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். லேசாக வேகத்தை குறைத்த கார் டிரைவர் திடீரென வேகத்தை அதிகரித்துள்ளார். இதனால் காவலர் சுனில் என்பவர் காரை வழி மறித்துள்ளார்.

அப்போது கார் நிற்காமல் வேகமாக சென்றதால் உடனே முன்னால் ஏறியுள்ளார். ஆனாலும் நிற்காமல் கார் வேகமாக செல்ல, சுமார் 2 கிலோ மீட்டர் காரின் முன்பக்கத்தில் தொங்கியபடியே காரில் சென்றுள்ளார். இதனை காரினுள் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #POLICE #VIRAL