‘திடீரென’ சரிந்த மைதான மேற்கூரை... ‘நொடிகளில்’ மொத்தமாக இடிந்து விழுந்து... ‘இளைஞருக்கு’ நேர்ந்த சோகம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் விளையாட்டு மைதானத்தை இடித்துக்கொண்டிருக்கும்போது அதன் மேற்கூரை மொத்தமாக இடிந்து விழுந்து பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாகாணத்தில் 1980ஆம் ஆண்டு கட்டப்பட்ட மைதானம் ஒன்றை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்காக புதிய மைதானத்தை உருவாக்கும் நோக்கில் இந்த மைதானத்தை இடிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தை இடிப்பதன் ஒரு பகுதியாக மைதானத்தின் மேற்கூரையை வெல்டிங் மூலம் அகற்றும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த பழைய மைதானத்தின் மேற்கூரை திடீரென சரிந்து மொத்த கட்டிடமும் இடிந்துவிழ, வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் அருகிலிருந்த கிரேனை தாவிப் பிடித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே அவர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற 3 பேரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலிருந்த ட்ரோனில் பதிவான பதறவைக்கும் இந்த விபத்து காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
Worker dies in Russian sport stadium roof collapse pic.twitter.com/qZheIaHUoH
— World of Engineering (@engineers_feed) February 1, 2020
