VIDEO: 'வெடித்து சிதறிய எரிமலை'.. கண் இமைக்கும் நேரத்தில் பறந்த மர்ம துகள்.. ஏலியனின் பறக்கும் தட்டா? வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மெக்சிகோவில் எரிமலை வெடித்து சிதறியபோது விண்வெளி மனிதர்களின் பறக்கும் தட்டு சென்றதாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள் கிழமை மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள போபோகேட்பெட் என்ற இடத்தில் எரிமலை வெடித்து சிதறியது. எரிமலை வெடித்த சில நொடிகளில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வெளிச்சக்கீற்று கடந்து சென்றது.
இந்த காட்சி அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் இதை விண்வெளி மனிதர்களின் பறக்கும் தட்டு என்றும், ஏலியன் வருகையாக இருக்குமோ என்றும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் வானில் இருந்து விழும் எரிகல் என்று கூறுகின்றனர்.
Por si no lo vieron.
⚠️ Impresionante ⚠️
Actividad del #Volcán #Popocatépetl ayer a las 23:18 hrs.
Vista desde San Nicolás de los Ranchos, #Puebla.
Vía: @jabed1.
🚦El Semáforo de Alerta Volcánica se encuentra en #AmarilloFase2. pic.twitter.com/5SQAfl0sG7
— Webcams de México (@webcamsdemexico) January 28, 2020
