தூரத்தில் ‘கண்ணீருடன்’ மகள்... ‘அணைக்க’ கூட முடியாமல்... பணிக்கு செல்லும் ‘தாய்’... ‘கலங்க’ வைக்கும் வீடியோ...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 01, 2020 04:10 PM

செவிலியராக பணியாற்றும் தாய்க்கு மகள் உணவு கொண்டு  வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

China Corona Virus Heart Breaking Video Of Nurse Mother Daughter

சீனாவில் புத்தாண்டு மாதத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டு இருக்க வேண்டிய சாலைகள், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதுவரை அங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், நேரம் காலம் பார்க்காமல் சேவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செவிலியராக பணியாற்றும் தாய்க்கு மகள் உணவு கொண்டு வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமியின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், சிறுமி அவருக்கு உணவு கொண்டு வருகிறார். அப்போது மகளை அணைக்கக் கூட முடியாமல் தாய் கலங்கி நிற்க, சிறுமி கண்ணீரோடு தான் கொண்டுவந்த உணவை  சற்று தூரத்திலேயே வைத்துவிட்டு பின்னால் செல்கிறார். பின்னர் அவருடைய தாய் வந்து அந்த உணவை எடுத்துக்கொண்டு மகளின் முகத்தை பார்த்தபடியே மருத்துவமனைக்குள் செல்கிறார். சீனாவில் பரவி வரும் வைரஸ் தாக்குதல் தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

 

 

Tags : #CHINA #WUHAN #CORONA #VIRUS #NURSE #MOTHER #DAUGHTER #VIDEO