'இது என்ன புதுசா இருக்கு'... 'கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில்’... ‘இப்டி எல்லாம் கூடவா கொண்டாடுவாங்க’... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 31, 2020 04:05 PM

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், வீரர் ஒருவர் மைதானத்தில் செய்த காரியம் வைரலாகி வருகிறது.

Rivaldo Moonsamy performs caterpillar celebration Stuns fans

தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான CSA 3 பிரவின்சியல் கோப்பை கிரிக்கெட் நடைப்பெற்று வருகிறது. இதில் நார்த்தன்ஸ் மற்றும் பார்டர் அணிகள் மோதிய போட்டி பிரட்டோரியாவில் நடந்தது. இந்தப் போட்டியில் நடந்த சம்பவம் தான் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியில் பார்டர் அணி பேட்டிங் செய்த போது போட்டியின் 69-வது ஓவரை நார்த்தன்ஸ் அணி வீரரான ரிவால்டோ மூன்சாமி வீசினார். அப்போது பார்டர் அணி வீரரான நான்னலா யிகாவை, பகுதி நேர பந்து வீச்சாளாரன ரிவால்டோ மூன்சாமி அவுட்டாக்கினார். இதையடுத்து தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாத மூன்சாமி, குஷியில் தரையில் அப்படியே கம்பளிப்பூச்சி ஊர்ந்து செல்வது போல ஊர்ந்து சென்றார்.

மைதானத்தில் இவரின் இந்த வேடிக்கையான கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மூன்சாமியின் இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் வேடிக்கையாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags : #SOUTH AFRICA #CRICKET #WATCH #VIDEO