'நாய் குறுக்கே வந்ததால்'... 'பைக்கில் சென்ற காவலருக்கு'... 'நொடியில் நிகழ்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 21, 2019 01:37 PM

விருதுநகர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர், நிலை தடுமாறி கீழே சிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The guard who went in bike died as the dog came across

திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் சாம்பிரேம் ஆனந்த். இவர், முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் இருசக்கர வாகனம் மோதியது. அப்போது பேரிகார்டில் அவரது தலை மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீட்டு, அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காவலர் சாம்பிரேம் ஆனந்த் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #BIKE #POLICE