‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 21, 2019 04:56 PM

கேரளாவில் பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய இளம்பெண்ணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

College Girls Shocking Confession in Kerala Infant Baby Murder

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் தனது தோழியைத் தொடர்பு கொண்டு, “எனக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. வீட்டுக்கு தெரியாமல் குழந்தையை பையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கிறேன். குழந்தையை அப்புறப்படுத்த உன்னுடைய உதவி வேண்டும்” எனக் கேட்டுள்ளார். இதை நம்ப மறுத்த அவருடைய தோழி குழந்தையின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார். பின்னர் அவர் இறந்த குழந்தை ஒன்றின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்ப அதைப் பார்த்த தோழி அதிர்ந்து போயுள்ளார். இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸாருக்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்தப் பெண்ணின் பையில் பாலிதீன் கவரால் சுற்றிவைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டுள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கல்லூரி நண்பரைக் காதலித்ததாகவும், அவருடன் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன் அவர் தற்கொலை செய்துகொண்டதால் கர்ப்பமடைந்ததை வீட்டில் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.  6 மாத கர்ப்பமாக இருக்கும்போதே வீட்டின் பாத்ரூமில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாகவும் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை நம்பாத போலீஸார் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைகாக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை முடிவில் குழந்தையின் உடலில் பால் இருந்ததும், கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸார் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அந்தப் பெண், “திருமணம் ஆகாத நிலையில் குழந்தை பிறந்ததாலே கொலை செய்தேன். குழந்தை பிறந்த பிறகு பால் கொடுத்துவிட்டு துணியால் இறுக்கி குழந்தையைக் கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது தெரிந்த பின்பே அவருடைய காதலன் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

Tags : #KERALA #IDUKKI #COLLEGE #STUDENT #GIRL #BABY #MURDER #BAG #LOVER #SUICIDE