'2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை'.. அலறித்துடித்த பெற்றோர்!.. 'பதற வைக்கும்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Oct 20, 2019 10:39 PM

2வது மாடியில் இருந்து தவறுதலாக சாலை நோக்கி விழுந்த குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

baby fell down from 2nd floor, here is what happened

தொடர்பியல் என்று ஒரு நம்பிக்கை தர்க்கம் இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் நிகழ்வுகள் அவருக்கே தெரியாமல் இன்னொருவரை சார்ந்து சில சமயம் தீர்மானிக்கப்படும். ஆனால் அது அந்த இன்னொருவருக்கும் தெரியாது. இத்தனை சுவாரஸ்யமான அந்த நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் டிகாம்கர் பகுதியைச் சேர்ந்த ஆஷிஸ் ஜெயின் என்பவரது வீட்டின் 2வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை, நிலைதடுமாறி சாலையை நோக்கிகீழே விழுந்துள்ளது. உடனே குழந்தையின் பெற்றோர்கள் பதறியுள்ளனர்.

ஆனால் அதிர்ஷடவசமாக அவ்வழியே ரிக்‌ஷாக்காரர் ஒருவர் தனது ரிக்‌ஷாவுடன் அவ்வழியே வரும்போது, 2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை ரிக்‌ஷாவில் விழுந்தது. அதற்குள் அங்கு விரைந்த குழந்தையின் பெற்றோருக்கு குழந்தை பிழைத்துக்கொண்ட செய்தி ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

 

இதனை அடுத்து, மருத்துவர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு குழந்தை நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். எதேச்சையாக அவ்வழியே வந்த ரிக்‌ஷாக்காரரால் குழந்தை உயிர் பிழைத்துள்ள சம்பவம் அக்குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளது.

 

Tags : #BABY #FELLO DOWN #BIZARRE