‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 25, 2019 01:18 PM

கார்கள் மோதி விபத்துக்குள்ளானதால் பச்சிளம் குழந்தையுடன் அதன் பெற்றோரும் உயிர் தப்பியுள்ளனர்.

Accident Car Crash Saved Lives of Couple and Baby Chilling Video

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் செவ்வாய் அன்று இரவு பச்சிளம் குழந்தையை ட்ராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு அதன் பெற்றோர் சாலையைக் கடந்துள்ளனர். அவர்கள் செல்வதற்கான கிரீன் சிக்னல் விழுந்த பின்னரே அவர்கள் சாலையைக் கடந்தபோதும், விதிகளை மீறி அதிவேகத்தில் கார் ஒன்று அவர்கள் மீது மோத வந்துள்ளது.

அப்போது இடதுபுறத்தில் சரியாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று முதல் காரின்மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கார்களும் மோதிக்கொண்டதில் அதிர்ஷ்டவசமாக பச்சிளம் குழந்தையும், அதன் பெற்றோரும் உயிர் தப்பியுள்ளனர். விதியை மீறி ரெட் சிக்னலில் நிற்காமல் வந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது பதிவான 13 வினாடிகளே உள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #US #ACCIDENT #CAR #CRASH #COUPLE #BABY #VIDEO #VIRAL