‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த அதிரவைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 22, 2019 06:46 PM

கிருஷ்ணகிரியில் ஒரு வயதே ஆன குழந்தைக்கு பாலில் குருணை கலந்துகொடுத்து குழந்தையின் பாட்டியே கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Grand Mother killed her one YO Grand daughter in Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் நாகர்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - சத்யா தம்பதி. இவர்களுக்கு ஸ்ரீமதி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த வருடம் இரண்டாவதாக மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அவர்கள் வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்காக நாகர்குட்டை கிராமத்திற்கு வந்த செவிலியர் ஒருவர் குழந்தை அங்கு இல்லாததால் தாய் சத்யாவிடம் குழந்தையைப் பற்றிக் கேட்டுள்ளார். அதற்கு அவர் குழந்தையை தனது சகோதரியிடம் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவர் பேச்சில் சந்தேகமடைந்த செவிலியர் இதுகுறித்து மருத்துவர் ஹரிராம் என்பவரிடம் கூற அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையின் பாட்டி பொட்டியம்மாள் என்பவர் பாலில் குருணை கலந்துகொடுத்து குழந்தையைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.  இதையடுத்து பொட்டியம்மாளைக் கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KRISHNAGIRI #BABY #GRANDMOTHER #MURDER #GIRL #MILK