‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Sep 17, 2019 06:13 PM
பாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்து மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட கோட்கி பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் நம்ரிதா சாந்தினி என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று விடுதி அறையில் நம்ரிதா கழுத்தை சுற்றி துப்பட்டா இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீஸார் கூறியுள்ள நிலையில் அதை அவருடைய குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள நம்ரதாவின் சகோதரரும், மருத்துவ ஆலோசகருமான விஷால் சுந்தர் என்பவர், “என்னுடைய சகோதரி புத்திசாலி. அவருக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் அவரது கழுத்தை சுற்றிலும் மின்கேபிளால் இறுக்கப்பட்ட அச்சு உள்ளது. நாங்கள் இந்து சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய சகோதரியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க மக்கள் உதவ முன்வர வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
சிந்து மாகாணத்தில் ஆண்டுதோறும் 1000க்கும் அதிகமான இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது நம்ரிதாவின் மரணத்திலும் அவர் மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.