‘ஃபைன் மட்டும் போட்டீங்கன்னா இங்கேயே’.. ‘இளம்பெண்ணின் செயலால் உறைந்து நின்ற போலீஸார்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 16, 2019 06:23 PM

அபராதம் விதித்தால் தற்கொலை செய்துகொள்வேன் என இளம் பெண் ஒருவர் போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi woman gets challan threatens to commit suicide viral video

தலைநகர் டெல்லியிலுள்ள காஷ்மீர் கேட் பகுதியில் உரிய பதிவு எண் பலகை இல்லாமல் வந்த இளம்பெண் ஒருவரை நிறுத்திய போலீஸார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அபராதம் செலுத்த சம்மதிக்காத அந்தப் பெண் முதலில் தனது தாய்க்கு ஃபோன் செய்து பேசியுள்ளார். பின்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார்.

போலீஸார் அதை ஏற்க மறுத்ததால் அந்தப் பெண், “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். நான் தற்கொலை செய்துகொண்டால் என்ன செய்வீர்கள்” என சத்தம் போட்டுள்ளார். சுமார் 20 நிமிடமாக அந்தப் பெண்ணிடம் பேசியும் அவர் தொடர்ந்து வாக்குவாதம் செய்துகொண்டே இருந்ததால் வேறு வழியின்றி போலீஸார் அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Tags : #DELHI #TRAFFIC #POLICE #FINE #GIRL #SUICIDE #SHOCKING #VIRAL #VIDEO