‘ரூமில் இருந்த விஷ ஊசி, தற்கொலை கடிதம்’.. அதிர வைத்த மருத்துவக் கல்லூரி மாணவரின் இறப்புக்கான காரணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Sep 13, 2019 03:14 PM
மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட தொடர்பாக கடிதம் சிக்கியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் உதயராஜ். இவர் மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் வெளியே அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று உதயராஜ் தான் தங்கி இருந்த அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு தானே விச ஊசி போட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உதயராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து உதயராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்துள்ளது. அதில் பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை எடுக்க உள்ளதாக எழுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
