‘டின்னருக்கு வீட்டுக்கு வந்த நண்பனால்’... ‘இளம் தம்பதிக்கு அரேங்கேறிய கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 13, 2019 01:13 PM

ஏழு வயது மகன் கண்முன்னே, விருந்துக்கு வந்த நண்பனால், இளம் தம்பதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murdered in Gurugram couple wanted to settle abroad

உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான விக்ரம் சிங். இவரது மனைவி 32 வயதான ஜோதி. இவர்களுக்கு திருமணமாகி, ஏழு வயதில், மகன் உள்ளார். வேலை நிமித்தமாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள உத்யோக் நகரில், தனது குடும்பம் மற்றும் ஆட்டோ ஓட்டுநரான தம்பியுடன் வசித்து வந்தார். அங்குள்ள, பிபிஓ நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று அதிகாலை, இந்த இளம் தம்பதியினர் கொலை செய்துக்கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், கொலை செய்துவிட்டு அங்கேயே இருந்த குற்றவாளியைப் பிடித்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், குற்றவாளியின் பெயர் அபினவ் அகர்வால் என்பதும், கடந்த 4 வருடத்திற்கு முன்னர், கொல்லப்பட்ட விக்ரம் சிங்குடன், பிபிஓவில் ஒன்றாக வேலைப் பார்த்து வந்ததும் தெரியவந்தது. அப்போது வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.5 லட்சம் ரூபாய் விக்ரமிடமிருந்து வாங்கிவிட்டு, அபினவ் சாக்குபோக்கு சொல்லி வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை பணப் பிரச்சனையை தீர்க்கலாம் என்று, தனது வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு, அபினவை வரச் சொல்லியுள்ளார் விக்ரம். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியுள்ளனர். இதனைப் பார்த்த, விக்ரமின் தம்பி, அருகில் இருந்த தனது உறவினர் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டு அங்கேயே உறங்கிவிட்டார். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் விக்ரமின் வீட்டிலிருந்து, பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற அவரது தம்பி மற்றும் உறவினர்கள் திகைத்துப் போயினர்.

வீட்டின் 2-வது தளத்தின் ஹாலில் விக்ரமும், மாடிப்படியில் அவரது மனைவியும் கத்தியால், சரமாரியாக குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களது அருகில், 7 வயது மகன் எவ்வித காயமும் இன்றி இருந்தான். விக்ரமின் பக்கத்தில், அமர்ந்திருந்த குற்றவாளி அபினவ் அளித்த வாக்குமூலத்தில், பணத்தகராறில் விக்ரமை குத்தி கொலை செய்த அபினவ், அதனைக் கண்டு கூச்சலிட்ட மனைவியையும் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தப்பித்து ஓட முயன்ற அவர், மெயின்கேட் பூட்டப்பட்டிருந்ததால், அங்கேயே இருந்துள்ளார். அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MURDER #HARYAN #PARTY #FRIEND